ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய அளவில் புகழ் பெற்று தற்போது பாலிவுட் வரை தனது எல்லையை விரிவு படுத்திவிட்டார். அதிலும் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் இன்னும் மிகப்பெரிய அளவில் ராஷ்மிகாவை பாலிவுட் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விட்டது. அதுமட்டுமல்ல மும்பை மீடியாக்களிடமும் எந்தவித பந்தாவும் இன்றி பழகி வருகிறார். குறிப்பாக புகைப்பட கலைஞர்களின் செல்லப் பிள்ளையாகவே ஆகிவிட்டார் ராஷ்மிகா.
இந்த வகையில் சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்தார் ராஷ்மிகா. அந்த நேரத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் அதே விமானத்தில் பயணிக்க வருகை தந்தார். அப்போது கல்யாணியையும் தன்னுடன் சேர்த்து அணைத்தபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடி நடந்தார் ராஷ்மிகா.
அப்போது கல்யாணி யார் என அவர்கள் கேட்க 'இது கல்யாணி பா' என்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் ராஷ்மிகா. இருவரும் ஒன்றாக நடந்து வந்தபோது ஒரு கட்டத்தில் கல்யாணியின் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சித்தார் ராஷ்மிகா. ஆனால் கல்யாணியோ என் பின்னாடி ஒளிய வேண்டாம். என்னை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று சங்கோஜத்துடன் ராஷ்மிகாவிடம் கூறினார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.