கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் | கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் |
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் உருவாகியுள்ள படம் மெர்ரி கிறிஸ்துமஸ். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கத்ரீனா கைப் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இதற்கான பிரிமியர் காட்சி சமீபத்தில் பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. விஜய்சேதுபதியின் நண்பரும் அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தை பார்த்துட்டு தனது பாராட்டுக்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் கத்ரீனா இருவரின் நடிப்பையும் பார்த்து திகைத்துப் போய் விட்டேன். படத்தில் திரில்லிங்கான திரைக்கதையை கையாண்டுள்ளார் ஸ்ரீராம் ராகவன். படத்தின் கடைசி 30 நிமிடங்களை பார்க்கும் போது ஆல்பர்ட் ஹிட்ச்காக் காலத்திற்கே சென்று விட்டது போல இருந்தது. படத்தின் இசையமைப்பாளர் பிரீத்தமின் இசை இன்னொரு முக்கியமான தூண் என்று சொல்லலாம். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஹாலிவுட் இயக்குனர் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் படங்கள் என்றாலே திகிலும் த்ரிலும் கலந்தவையாக இருக்கும். படம் பார்ப்பவர்களை திகிலில் உறைய வைக்கும். அப்படி ஒரு அனுபவத்தை மெர்ரி கிறிஸ்துமஸ் தந்ததாக பாராட்டி உள்ளார் விக்னேஷ் சிவன்.