காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து, மீண்டும் திருமணம் என்று இருக்கும் பாலிவுட்டில் ஒரு பெண்ணை மணந்து அவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்து, அந்த வாழ்க்கையின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக 20 ஆண்டுகளுக்கு பிறகு அவரை மீண்டும் திருமணம் செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் பாலிவுட் வில்லன் நடிகர் ரோனித் ராய்.
1992ம் ஆண்டு 'ஜானே தேரா நாம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரோனித் ராய். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். ஜெயம் ரவியின் 25வது படமான 'பூமி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
2003ம் ஆண்டு ஜோன்னா நீலம் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான 20ம் ஆண்டில் திருமணம் நடந்த அதே தேதியில் தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்திருக்கிறார் ரோனித் ராய். இந்த திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கோவாவில் உள்ள கோயில் ஒன்றில் இந்த திருமணம் நடந்தது. இதே கோவிலில்தான் ரோனித் ராய் தனது மனைவி நீலத்தை திருமணம் செய்தார். அப்போது எந்த மாதிரி திருமணம் நடந்ததோ, அதேபோன்று மீண்டும் நடத்தி மனைவி மீது கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தி உள்ளார். ரோனித் ராய்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.