'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைப் நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. ரமேஷ், துரானி, சஞ்சய், ஜெயா துரானி மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். பிரதிமா கண்ணன் டினு ஆனந்த், ஆகியோர் ஹிந்தியிலும், ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் ஆகியோர் தமிழிலும் நடித்திருக்கிறார்கள். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு மொழிகளிலும் நடித்திருக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் பின்னணியில் நடக்கும் பேமிலி த்ரில்லர் கதையாக இது உருவாகி உள்ளது. விஜய்சேதுபதி, கத்ரீனா கைப், ராதிகா ஆப்தே இந்த மூவருக்கும் இடையிலான உறவும், அதில் எழும் சிக்கலுமாக கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ராதிகா சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.