‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து தற்போது அங்கேயும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கிறது. பட வெளியீட்டுக்கு முன் படம் வெளியாகும் சந்தோஷத்தில் இருந்த ராஷ்மிகாவுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் அவரைப்போன்றே மார்பிங் செய்து உருவாக்கப்பட்ட ஒரு ஆபாச வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு திரையில் இருந்து அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்து ராஷ்மிகாவுக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் இந்த வீடியோ வெளியானதன் பின்னணியில் செயல்பட்ட நான்கு பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். அதே சமயம் இவர்களது பின்னணியில் மாஸ்டர் மைண்ட் ஆக இருந்து செயல்பட்ட நபர்களையும் கண்டுபிடிக்கும் விதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் போலீசார்.