கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
புதுடில்லி: பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கு வயது 85.
இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு மிக உயர்ந்த விருதாக வழங்கப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இதற்கு முன்னர் சிவாஜி கணேசன், கே பாலசந்தர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், லதா மங்கேஷ்கர், கே விஸ்வநாத் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைக்கலைஞர்கள் இந்த விருதை வென்றுள்ளனர். இந்தாண்டுக்கான விருது வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் வஹீதா ரஹ்மான். 1960, 70களில் சினிமாவில் நடிகையாக பிரபலமானார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி போன்ற மொழிகளில் நடித்துள்ள வஹீதா, தமிழில் எம்ஜிஆர் நடித்த அலிபாபுவும் 40 திருடர்கள் படத்திலும் நடித்தார். கடைசியாக கமலின் விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் வஹீதா ரஹ்மானுக்கு இந்தாண்டுக்கான புகழ்மிக்க 'தாதா சாகேப் பால்கே' வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.