என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

முன்னணி பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா. 2013ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளில் 10 படங்களில்தான் ஹீரோயினாக நடித்துள்ளார். 10 படங்கள் வரை ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். தமிழில் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி ஜோடியாக 'லெஜண்ட்' படத்தில் நடித்தார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்கள், இசை ஆல்பங்களில் நடித்துள்ளார்.
ஆனால் தான் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்குவதாக அடித்து விட்டுள்ளார். அவரும் ஒரு பத்திரிகை நிருபரும் பேசிக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் நிருபர், “அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகி விட்டதாக கூறுகின்றனர். 1 நிமிடத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக எப்படி மாறினீர்கள்?” என்று கேட்கிறார்.
அதற்கு ஊர்வசி ரவுடேலா “இது நல்ல முன்னேற்றம்தானே. ஒவ்வொரு நடிகருக்கும், நடிகைக்குள்ளும் இருக்கும் சம்பள சாதனையாக இதனை பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார். “ஊர்வசி ரவுடேலா 1 மணி நேரத்தில் 60 கோடி சம்பாதிக்கிறார். ஒரே நாளில் 1,440 கோடி வரை சம்பாதிப்பாரா.? உலகத்திலேயே இவர்தான் அதிகம் சம்பாதிப்பவர் என்று அவருக்கு உலக ரத்னா பட்டம் தரலாமா? என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.