இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த 2006ம் ஆண்டில் ஷாரூக்கான், பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த படம் 'டான்'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான் இரண்டாம் பாகத்திலும் ஷாரூக்கான் நடித்து கடந்த 2011ம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பர்ஹான் அக்தர் தயாரித்து, இயக்கினார்.
நேற்று பர்ஹான் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் டான் 3ம் பாகத்திற்கு ஹின்ட் கொடுக்கும் விதத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆனால், டான் 3ம் பாகத்தில் ஷாரூக்கானுக்கு பதிலாக நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இன்று(ஆக., 9) அதிகாரப்பூர்வமாக டான் 3ம் பாகத்தில் பர்ஹான் அக்தர் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார் என அறிவிப்பு வீடியோ உடன் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு நம்ம ஊர் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூடுதல் திரைக்கதை எழுதுகின்றனர். இப்படத்தை ரித்தேஷ் சித்வானி, பர்ஹான் அக்தர் தயாரிக்கின்றனர். 2025ம் ஆண்டில் இப்படம் வெளியாகிறது. மேலும், ஷாருக்கானுக்கு பதில் ரன்வீர் சிங் நடிப்பதால் ஷாரூக்கான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரன்வீர் சிங்ஙை விமர்சித்து வருகின்றனர்.