மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தமிழ் இயக்குனராக அட்லி இயக்க, தமிழ் இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'ஜவான்'.
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமை 36 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. இதற்கு முன்பு எந்த ஒரு ஹிந்திப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையும் இவ்வளவு அதிகத் தொகைக்கு விற்கப்பட்டதில்லை என்கிறார்கள். இந்த இசை உரிமையைப் பெற ஆடியோ நிறுவனங்களிடம் பலத்த போட்டி நிலவியதாம்.
தமிழ் இயக்குனர், தமிழ் இசையமைப்பாளர், தமிழின் முன்னணி நாயகியான நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி என பல தமிழ்க் கலைஞர்கள் இணைந்துள்ள ஒரு ஹிந்திப் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பும், விலையும் இருப்பது பாலிவுட்டினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள். ஷாரூக்கான் நடித்து இதற்கு முன்பு வெளியான 'பதான்' படம் 1000 கோடிக்கும் அதிகமான தியேட்டர் வசூலைக் கொடுத்ததும் இந்த 'ஜவான்' படத்திற்கான அனைத்து வியாபாரமும் அதிகமாகக் காரணம் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.