Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் பர்சனல் விஷயத்தில் தலையிட கங்கனாவுக்கு உரிமை இல்லை : நவாசுதீன் சித்திக் மனைவி காட்டம்

30 ஜூன், 2023 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Kangana-has-no-right-to-interfere-in-my-personal-matter:-says-Nawazuddin-Siddiquis-wife-Kattam

பாலிவுட் நடிகை கங்கனா ரணத்துக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்துக் கொண்டே வருவார். அதேசமயம் ஒருவரை பிடித்து விட்டது என்றால் அவர்கள் பின்னணியில் என்ன சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்கி விடுவார். அப்படித்தான் கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திகிற்கும் அவரது மனைவி ஆலியாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விவாகரத்துக்கான விண்ணப்பிப்பு இதெல்லாம் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில் நவாசுதீன் சித்திக்கிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் கங்கனா.

சமீபத்தில் தனது மனைவி ஆலியா குறித்து ஒரு கடுமையான அறிக்கை ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் நவாசுதீன் சித்திக். இது குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்த கங்கனா, “இந்த நேரத்தில் தேவையான ஒன்றுதான் இது.. மௌனம் ஒருபோதும் அமைதியை கொண்டு வந்து தராது நவாசுதீன் சார்.. உங்களுடைய இந்த அறிக்கையை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

கங்கனா முதன்முறையாக தயாரிப்பாளராக மாறி தயாரித்துள்ள 'டிக்கு வெட்ஸ் ஷெரு' என்கிற படத்தில் கதாநாயகனாக நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் துவங்கிய பிக்பாஸ் ஓடிடி சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்ற ஆலியா சித்திக் ஒரே வாரத்திலேயே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வெளிவந்த நிலையில் கங்கனாவின் இந்த பதிவு அவரை கோபப்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறும்போது, “கங்கனா எப்போதுமே தனக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதுமட்டுமல்ல தவறான நபர்களுக்கு எப்போதுமே வக்காலத்து வாங்கும் முதல் நபராக அவர் இருக்கிறார். ஒருவேளை நவாசுதீன் சித்திக்கை வைத்து அவர் தயாரித்துள்ள தனது படத்திற்கு எந்த சிக்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி அவருக்கு சப்பைக்கட்டு கட்டுகிறாரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரிலீஸ் தேதியுடன் வெளியானது ‛கேரளா ஸ்டோரி' இயக்குனரின் அடுத்தபட அறிவிப்புரிலீஸ் தேதியுடன் வெளியானது ‛கேரளா ... 'ஜவான்' இசை வெளியீட்டு உரிமை : அதிக விலைக்கு விற்பனை 'ஜவான்' இசை வெளியீட்டு உரிமை : அதிக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

01 ஜூலை, 2023 - 07:32 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் தனது இடத்தை கங்கனா பிடித்து விடுவாரோ என்று ஆலியாவுக்கு அச்சம் ..... நவாஸுதீன் சித்திக் க்கு மச்சமோ மச்சம் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in