மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆதி புருஷ். ஒரு சில வாரத்திற்கு முன்பு திரைக்கு வந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு தரப்பினர் கொண்டாடினாலும் மற்றொரு தரப்பினர் படத்தின் கிராபிக்ஸ் சரியில்லை, அவர்களின் தோற்றம் மற்றும் வசனங்கள் குறித்து விமர்சனம் எழுந்தது. இதனால் படத்தின் வசூலும் சற்றென்று குறைந்தது. இந்தநிலையில் ஆதி புருஷ் படத்தை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அவரது டுவிட்டரில் "ஆதி புருஷ் பார்த்த பிறகு தான் புரிந்தது பாகுபலி படத்தில் ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.