பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
கோபிசந்த், ராஷி கண்ணா நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'ஜில்' என்ற தெலுங்கு படம் மூலம் நடிகரானவர் கபீர் துஹான் சிங். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். வேதாளத்தை அடுத்து றெக்க, காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன், தெற்கத்தி வீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது மாராத்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
கபீர் துஹான் சிங்கிற்கும், அவரது உறவுக்கார பெண்ணான ஹரியானாவை சேர்ந்த ஆசிரியை சீமா சாஹலுக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது. டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமண படங்களை வெளியிட்டுள்ள கபீர் சிங் “இது காதல் திருமணம் அல்ல, பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். எனது குடும்பம் பெரியது. அதனை தலைமையேற்று கவனித்துக் கொள்ளவும், எனது தொழிலை புரிந்து கொண்டு எனக்கு துணையாக இருக்கவும் ஒரு பெண்ணை விரும்பினேன். அப்படியொரு பெண்ணை எனக்காக தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.