உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் |

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019 ஆண்டு வெளிவந்து, வரவேற்பை பெற்ற படம் ‛வார்'. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். இந்த வருடம் நவம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ள நிலையில் முதற்கட்டமாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தேடல் பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.