ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆர்யன் கானை விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 25 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் அப்போது போதை பொருள் தடுப்பு அதிகாரியாக இருந்த சமீர்வான்கடே உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
தற்போது சென்னையில் வரி செலுத்துவோர் சேவை பிரிவு தலைமை அதிகாரியாக பணியாற்றி வரும் சமீர்வான்கடே சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் இரண்டு நாட்களாக தினமும் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும் முன் அவரை பேட்டி எடுக்க மீடியாக்கள் முயன்றன அப்போது அவர் “நீதிதுறையின் மீது நம்பிக்கை உள்ளது” என்று மட்டும் கூறிச் சென்றார். முன்னதாக அவர் பிரபாதேவியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.