தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து வெளிவந்த திரைப்படம் 'வார்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஜூனியர் என்.டி.ஆர் என்று சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்போது ஹிருத்திக் ரோஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டராக். இந்த நாள் மகிழ்ச்சியாகவும், வரும் ஆண்டு ஆக்ஷன் நிறைந்ததாகவும் அமைய வாழ்த்துகிறேன். யுத்த பூமியில் உங்களுக்காக காத்திருக்கிறேன் நண்பா. உங்கள் நாள் மகிழ்வும், அமைதியும் நிறைந்திருக்கட்டும் நாம் சந்திக்கும்வரை” என்று மறைமுகமாக ஜூனியர் என்டிஆர் ‛வார் 2' படத்தில் நடிப்பதை தெரிவித்துள்ளார் ஹிருத்திக் ரோஷன்.