டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
கடந்த சில நாட்களுக்கு முன்பு ‛தி கேரளா ஸ்டோரி' என்கிற படம் மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே வெளியானது. கேரளாவில் அப்பாவி இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவர்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படும் கொடுமையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. சுதிப்தோ சென் என்பவர் இயக்கிய இந்த படத்தை விபுல்ஷா என்பவர் தயாரித்திருந்தார். இந்த படத்தை வெளியிட பல இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றம் இந்த படத்தை போலீஸ் பாதுகாப்புடன் திரையிட உத்தரவிட்டது. இருந்தாலும் சில மாநில அரசுகள் இந்த படத்தை வெளியிட தடை விதித்தன. அதேசமயம் சில மாநில அரசுகள் இந்த படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே வரிவிலக்கும் அளித்தன. அந்த வகையில் தற்போது வரை கிட்டத்தட்ட ரூ.170 கோடி இந்த படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இப்படி மதமாற்றம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் விதமாக தற்போது அப்படி பாதிக்கப்பட்ட 300 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கென ஒரு ஆசிரமம் உருவாக்கப்பட்டு மறுவாழ்வுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தை படத்தின் தயாரிப்பாளர் விபுல்ஷா துவங்கி வைத்துள்ளார். அதுமட்டுமல்ல இதற்காக 51 லட்சம் ரூபாய் தொகையையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படம் எடுக்கப்பட்டதன் நோக்கமே இப்படி பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். இந்த படம் அதை பெருமளவில் செய்து வருகிறது. அந்த நோக்கத்தை மேலும் நிறைவேற்றும் விதமாக தான், தற்போது இந்த புதிய திட்டத்தை துவங்கியுள்ளோம். நானும் தி கேரள ஸ்டோரி படக்குழுவினரும் சேர்ந்து இதற்காக 51 லட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.