பாலாவின் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபடும் மாரி செல்வராஜ் | பிளாஷ்பேக்: ஒரே பஞ்ச் டயலாக்கில் வெளிவந்த இரண்டு படங்கள் | அக்ஷய் கண்ணாவை கவர்ந்திழுக்க முயற்சித்த கங்கனா ரணாவத் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் நல்லா நாகப்பாவாக பார்த்திபன் | தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்களே… எந்தப் படம் வெளியாகும் ? | ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்' | நடிகையான அமைச்சர் மகள் | ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்' | கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு | பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள் |

பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தற்போது தமிழில் ‛சந்திரமுகி 2' படத்திலும், ஹிந்தியில் முன்னாள் பிரதமர் இந்திரா காலக்கட்டத்தில் நடந்த எமெர்ஜென்சி சம்பவத்தை மையமாக கொண்ட ‛எமெர்ஜென்சி' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தியா முழுக்க ஏராளமான தியேட்டர்களை கொண்டுள்ள பிவிஆர் குழுமத்திற்கு இந்தாண்டு 333 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாடு முழுக்க 50 தியேட்டர்களை மூட முடிவெடுத்து இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா, "நம் நாட்டிற்கு இன்னும் அதிகமான தியேட்டர்கள் தேவைப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில் தியேட்டர்களை மூடுவது திரைத்துறைக்கு நல்லதல்ல. அதேசமயம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குடும்பத்துடன் படம் பார்க்க தங்களின் சம்பளத்தின் பெரும் பகுதியைச் செலவிட வேண்டி இருக்கிறது. இந்த நிலையை சரி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.