நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இலங்கையை சேர்ந்த மாடல் அழகியான ஜாக்குலின் பெர்னாண்டஸ் தற்போது முன்னணி பாலிவுட் நடிகை. பெங்களூரை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரை காதலித்த ஜாக்குலின் அவரிடமிருந்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை பெற்றார். தற்போது மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் சுகேஷ் சிறையில் இருந்து கொண்டே 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஜாக்குலினும் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஜாக்குலின் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். சிறையில் இருக்கும் சுகேஷ் ஜாக்குலினுக்கு உருகி உருகி காதல் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். ஜாக்குலின் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் அவர் தற்போது சமூக சேவையில் இறங்கி இருக்கிறார். அது மனிதர்களுக்கானதல்ல விலங்குகள், பறவைகளுக்கானது. கோடை காலத்தில் விலங்குகள், பிராணிகள், பறவைகள் நீர் அருந்த வசதியாக கிண்ணங்கள் மற்றும் மண் கலயங்களில் நீர் நிரப்பி வைக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரும் சிறிய தொட்டியில் நீர் நிரப்பி வைக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக ஜாக்குலின் வெளியிட்டுள்ள பதிவில், "வெயில் காலத்தில் விலங்குகள் பறவைகளுக்காக உங்கள் வீடுகளின் முன்னால் மண் கலயங்களில் நீர் நிரப்பி வையுங்கள். நீரை தேங்க விடாமல் தினமும் புதிய நீரை நிரப்பி வையுங்கள். இது கோடையில் நீர் இன்றி கஷ்டப்படும் விலங்குகள். பிராணிகள், பறவைகளுக்கு உதவும். நான் இதனை தினமும் செய்ய இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.