‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு |
ஹிந்தியில் உருவாகி உள்ள ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த சில தினங்களாகவே கேரளாவையும் தாண்டி நாடெங்கிலும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஹிந்து அப்பாவி பெண்களை லவ் ஜிகாத் என்கிற பெயரில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவர்களை ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் தொழிலாளிகளாக அனுப்பி வைக்கப்படுவதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தை திரையிடக்கூடாது எனக் கூறி சில அமைப்புகளிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் இந்த படத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுத்து விட்டது. அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளியன்று போலீசார் பாதுகாப்புடன் இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் இந்த படத்திற்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த படம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதால் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள், குறிப்பாக மகள்களுடன் சென்று இந்த படத்தை பார்ப்பதற்கு வசதியாக வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.