பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான்கான் ஐம்பது வயதை கடந்த பின்னரும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலராகவே வலம் வருகிறார். அதே சமயம் கடந்த 25 வருடங்களில் தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கவும் இவர் தவறவில்லை. ஆனால் அப்படி இவருடன் கிசுகிசுக்கப்பட்ட அனைத்து கதாநாயகிகளும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது சல்மான்கான் நடிப்பில் வெளியாகி உள்ள ‛கிஸி கா பாய் கிஸி கி ஜான்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சல்மான்கானிடம் அவரது காதல் ராசி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சல்மான்கான், "காதலுக்கும் எனக்கும் ராசியில்லை. என்னை காதலன் (ஜான்) என்று அழைக்க வேண்டியவர் அண்ணா (பாய்) என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்" என வேடிக்கையாக கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் நடிக்க துவங்கிய சமயத்தில் இருந்தே, கடந்த சில மாதங்களாக சல்மான்கானுக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் காதல் என்று மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது சல்மான் கான் இப்படி கூறியுள்ளது பூஜா ஹெக்டேவை மனதில் வைத்து தானா என்று சோஷியல் மீடியாவில் மீண்டும் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது.