கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டில் வெளியான படம் 'வீரம்'. சுமாரான வெற்றியைப் பெற்ற அந்தப் படம் பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க 'கட்டமராயுடு' என்ற பெயரில் 2017ம் ஆண்டிலும், கன்னடத்தில் தர்ஷன், சனா திம்மய்யா மற்றும் பலர் நடிக்க 'ஒடேயா' என்ற பெயரில் 2019ம் ஆண்டிலும் ரீமேக் ஆனது.
இப்போது ஹிந்தியில் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் ஆகி நாளை மறுநாள் ஏப்ரல் 21ம் தேதி வெளியாக உள்ளது. பர்ஹத் சாம்ஜி இயக்கத்தில் சல்மான் கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரைலர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி 42 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தெலுங்கு கன்னடத்தில் சுமாரான வரவேற்பையும், வசூலையும் மட்டுமே பெற்றது. ஹிந்தியில் சமீப காலங்களில் வெளியான ரீமேக் படங்களுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அஜய் தேவகன் நடித்து வெளியான 'கைதி' ஹிந்தி ரீமேக்கான 'போலா' கூட தோல்வியடைந்தது.
சல்மானுக்கென்று ஹிந்தியில் தனி வரவேற்பு உண்டு. அதனால், 'கிசி கா பாய் கிசி கி ஜான்' வெற்றி நடை போடும் என பாலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள்.