கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? | விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? |
ஆதித்ய சோப்ரா இயக்கத்தில், ஜதின்--லலித் இசையமைப்பில், ஷாரூக்கான், கஜோல் மற்றும் பலர் நடிப்பில் 1995ம் வருடம் அக்டோபர் 20ம் தேதி வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'தில் வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'. பாலிவுட்டின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் படம் இது.
கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக மும்பை, மராத்தா மந்திர் தியேட்டரில் காலை காட்சியாக தற்போதும் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் 10,000 நாட்களைத் தொட உள்ளது. இப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் இப்போது ரிலீஸ் செய்துள்ளார்கள்.
'டிடிஎல்ஜே' படத்தைத் தயாரித்த யாஷ்ராஜ் நிறுவனம்தான் தற்போது சாதனை படைத்து ஓடிக் கொண்டிருக்கும் 'பதான்' படத்தையும் தயாரித்துள்ளது. இரண்டு படங்களைப் பற்றிய பற்றிய பதிவு ஒன்றை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில், “இரண்டு சகாப்தங்களின் பிளாக்பஸ்டர்ஸ். டிடிஎல்ஜே மற்றும் பதான் இங்கே…இந்த காதலர் தின வாரத்தில் பிரம்மாண்டத்தை உங்கள் அருகாமையில் உள்ள தியேட்டர்களில் பாருங்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அதை மறுபதிவு செய்து ஷாரூககான், “நண்பர்களே, கஷ்டப்பட்டு நான் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளேன். இந்த சமயத்தில் நீங்கள் 'ராஜ்'ஐ மீண்டும் கொண்டு வருகிறீர்கள். இந்த போட்டி என்னைக் கொல்லுகிறது. நான் 'பதான்' படத்தைத்தான் பார்ப்பேன். சரி..ராஜ் வீடு எங்குள்ளது,” என சுவாரசியமாகப் பதிவிட்டுள்ளார்.
'டிடிஎல்ஜே' படத்தில் ஷாரூக்கின் ராஜ் கதாபாத்திரமும், கஜோலின் சிம்ரன் கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றவை. ரீ-ரிலீஸ் ஆகியுள்ள இந்தப் படம் இந்த வாரத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் வசூலைப் பெறும் என்கிறார்கள்.