நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது |
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான உதவிகளை செய்து பாராட்டுகளை பெற்றவர் சோனு சூட். சினிமாவில் வில்லனாக நடிக்கும் அவர் நிஜத்தில் ஹீரோவாக பார்க்கப்பட்டார். தற்போதும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி பலருக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் ஒரு ரயிலில் படிக்கட்டு அருகே அமர்ந்து பயணிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படி பயணம் செய்வது சட்டவிரோதம் ஆகும். சோனு சூட் போன்றவர்கள் இப்படி செய்வது இளைஞர்களை இத்தகைய ஆபத்தான பயணத்துக்கு தூண்டுவதாகும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த வீடியோவுக்கு வட இந்திய ரயில்வே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது தனது பதிவில் கூறியிருப்பதாவது: லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை ரயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் “இது மிகவும் ஆபத்தான பயணம் . இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம். படங்களில் வேண்டுமானால் ரயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சோனு சூட் தனது பதிவில் “எனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தை மீறும் எண்ணம் எதுவும் இல்லை. தினமும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வதை பார்த்திருக்கிறேன். அவர்களது கஷ்டத்தை உணர்ந்து பார்க்கவே சிறிது நேரம் அந்த பயணத்தை மேற்கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.