நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்த 2022ம் வருடம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து இந்த வருடத்தில் சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள் என பல விஷயங்கள் உள்ளூர் மீடியாக்களில் இருந்து உலகளாவிய பத்திரிக்கைகள் வரை அலசப்பட்டு அதில் மிகச்சிறந்த 10 பேர், 50 பேர் அல்லது 100 பேர் கொண்ட பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் வெளியாகும் எம்பயர் என்கிற பத்திரிக்கை இந்த வருடத்தில் உலக அளவில் சிறந்த நடிகர்கள் என 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவிலிருந்து இடம்பிடித்துள்ள ஒரே நடிகர் ஷாருக்கான் மட்டுமே. இவர் தவிர டென்சில் வாஷிங்டன், மார்லன் பிராண்டோ, ஜேக் நிக்கல்சன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். உடைக்க முடியாத பல வெற்றிகள், பில்லியன் கணக்கில் உள்ள ரசிகர் பட்டாளம், நான்கு தலைமுறைகளாக நீடித்து நிலைத்திருக்க வைத்திருக்கும் கரிஸ்மா இவையெல்லாம் தான் இந்த 50 பேர் பட்டியலில் ஷாருக்கான் இடம்பெற காரணம் என அந்த பத்திரிகையில் ஷாருக்கான் பற்றிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது.