தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு | 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் |

பாலிவுட் நடிகை தபு திரையுலகில் நுழைந்து 30 வருடங்களை கடந்து விட்டார். தமிழில் காதல் தேசம் படம் மூலம் அறிமுகமான இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட இரண்டு படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தற்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தபு, இந்த வருடத்தில் நடித்த பூல் புளையா-2 மற்றும் கடந்த நவம்பர் மாதம் வெளியான த்ரிஷ்யம்-2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. சந்திரமுகி படத்தின் ஹிந்தி பதிப்பாக பூல் புலையா படம் 2007ல் வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக பூல் புலையா-2 உருவாகி வெற்றி பெற்றது.
அதேபோல த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமாக அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்து வெளியான திரிஷ்யம்-2வும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தபு நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் அஜய் தேவனுடன் கைதி ரீமேக்காக ஹிந்தியில் உருவாகிவரும் போலா என்கிற படத்தில் நடித்துள்ளார் தபு.
தமிழில் நரேன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் ஹிந்தியில் தபு நடித்துள்ளார். இந்த படமும் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப் படம் ஹிந்தியிலும் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அந்தவகையில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இப்போதிருந்தே காத்திருக்கிறார் நடிகை தபு.