குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாரூக்கான். அவருக்கு ஆர்யன் கான் என்ற மகன், சுஹானா கான் என்ற மகள், அப்ராம் என்ற மகன் இருக்கிறார்கள். 25 வயதாகும் ஆர்யன் கான் கலிபோர்னியாவில் உள்ள திரைப்படப் பள்ளியில் பிலிம் மேக்கிங் படிப்பை முடித்துள்ளார். அவருக்கு நடிகராவதை விட இயக்குனர் ஆவதில்தான் விருப்பம்.
தற்போது திரைப்படம் இயக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ள ஆர்யன் ஒரு கதையை எழுதி முடித்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது அப்பா ஷாரூக்கிற்குச் சொந்தமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் பெயர் எழுதப்பட்ட கிளாப் போர்டு, மற்றும் கதை எழுதிய புத்தகம் ஆகிய புகைப்படங்களுடன், “எழுதி முடித்துவிட்டேன், ஆக்ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை,” என்று பதிவிட்டுள்ளார். அது ஒரு வெப் சீரிஸுக்கான கதையாம், 2023ல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்கிறார்கள்.
அந்தப் பதிவின் கமெண்ட் பகுதியில், “வாவ்…யோசித்தது, நம்பியது, கனவு கண்டது நடந்தது…. இப்போது தைரியமாக… முதல் ஒன்றிற்கு எனது வாழ்த்துகள், அது எப்போதும் சிறப்பானது” என ஷாரூக் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆர்யனின் அம்மா கவுரி கான், “பார்ப்பதற்கு காத்திருக்க முடியவில்லை,” என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் ஆர்யனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.