பாலிவுட்டின் முன்னணி நடிகையான சன்னி லியோன் சமீபகாலமாக தமிழ், மலையாளம் படங்களிலும் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். தற்போது தமிழில் ‛ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்து முடித்திருப்பவர், அதையடுத்து ‛தீ இவன்' என்ற படத்தில் நடிக்கிறார். அதுபோல் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சன்னி லியோன் அளித்த ஒரு பேட்டியில் சொன்ன கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது, ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து வருகிறார். என்றாலும் படப்பிடிப்பு தளங்களில் தான் கவர்ச்சிகரமான உடை அணிந்து நடிக்கும்போது அந்த ஸ்பாட்டில் தன்னுடைய குழந்தைகளோ அல்லது மற்றவர்களின் குழந்தைகளோ இருப்பதற்கு அவர் அனுமதிப்பதில்லையாம். அப்படி யாரேனும் சிறிய குழந்தைகள் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் தான் நடிப்பதையே தவிர்த்து விடுவதாகவும் சன்னிலியோன் தெரிவித்திருக்கிறார். அவர் சொன்ன இந்த கருத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.