தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா |
பாலிவுட்டில் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்து வந்ததால் கடந்த வாரம் வெளியான 'பிரம்மாஸ்திரா' படம் மீது பலரது பார்வை இருந்தது. விமர்சனங்கள் இருவிதமாக வந்தாலும் படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுடன் முடிவடைந்த முதல் மூன்று நாட்களில் இப்படம் சுமார் 250 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் முதல் நாளில் 75 கோடி, இரண்டாம் நாளில் 85 கோடி, மூன்றாம் நாளில் 90 கோடி வசூலித்ததாகச் சொல்கிறார்கள். இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட் வரை செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் மொத்தமாக 700 கோடி வரை வசூலித்தால்தான் படம் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
கடந்த மூன்று நாட்கள் ஒரு எதிர்பார்ப்பில் படம் ஓடியிருந்தாலும் இன்று திங்கள் கிழமை வசூல் நிலவரத்தை வைத்துத்தான் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்று தெரியும். வார நாட்களிலும் தியேட்டர்களில் கூட்டம் வந்தால் மட்டுமே படம் 700 கோடி வசூலைப் பெற முடியும்.
டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமைகள் மூலம் சுமார் 200 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள். இது நேரடியாக தயாரிப்பு நிறுவனத்திற்குத்தான் போகும். தியேட்டர்களில் வெளியிட படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு படம் ஓடி வசூலித்தால் மட்டுமே லாபம்.