அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ஹிந்தி படம், 'சாம்ராட் பிருத்விராஜ்'. மனுஷி சில்லார், சஞ்சய் தத், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். மனுஷ் நந்தன் கேம்ராவும், ஷங்கர் - எஹசான் -லாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழில் மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. முகலாய மன்னன் முகமது கோரியிடம் இருந்து நாட்டைக் காக்க போராடிய மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு குவைத், கத்தார் மற்றும் ஓமன் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.'புகழ்பெற்ற இந்து சாம்ராட் பிருத்விராஜ் வாழ்க்கை மற்றும் தைரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் மேற்சொன்ன நாடுகளில் தடைசெய்யப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. படம் வெளிவரும் முன்பே இந்த நாடுகள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிகிறது' என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது .