இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சூர்யா நடிப்பில் சுதா இயக்கி வெளியான படம் சூரரைப்போற்று. ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான இப்படம் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. அதோடு பல திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் தற்போது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் அக்சய்குமாரை வைத்து ரீமேக் செய்கிறார் சுதாகொங்கரா. இப்படத்தை சூர்யாவின் 2 டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு குடிசையில் பிதாமகன் விக்ரமைப்போன்று பரட்டை தலையுடன் சோகமாக அமர்ந்திருக்கிறார் அக்சய்குமார். அந்த வகையில் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் அக்சய்குமாரின் கெட்டப்பில் சில மாற்றங்களை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.