'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ராதிகாவுக்கு பாலிவுட் படங்கள் புதிதில்லை. 1979ம் ஆண்டே ஹம்ரே தும்ரே படத்தின் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்தவர் அவர். அதன் பிறகு அப்னே பயரே, ஆஜ் ஹா அர்ஜுன், ஹிம்மத்வாலா, லா பாதேஷ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மெர்ஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார்.
நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக வரும் ராதிகா போலீஸ் அதிகாரியாக இருப்பார். இந்த படத்திலும் அதேபோன்று ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கிரைம் த்ரில்லர் ஜார்னரில் உருவாகும் இந்த படத்தில் கொலையாளிகளை துரத்தும் டெரர் போலீஸ் அதிகாரி வேடத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதற்கு முன் போலீஸ் அதிகாரிகள் வேடத்தில் பல பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தபோதும் இந்த படத்தில் ராதிகா காட்டும் மாஸ் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.