எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கடந்த வருடம் திடீரென திருமணம் செய்துகொண்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும் திருமணம் முடித்த கையோடு மீண்டும் பிசியாக நடிக்க துவங்கி விட்டார் யாமி கவுதம். அந்தவகையில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அவர் நடித்துள்ள தேஸ்வி என்கிற படம் வரும் ஏப்-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சிறைக்கைதிகளை மையப்படுத்தி சென்ட்ரல் ஜெயிலை கதைக்களமாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயில் அதிகாரியாக யாமி கவுதம் நடித்துள்ளார். அதனால் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தப்படத்தை ஆக்ராவில் சென்ட்ரல் ஜெயிலில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். மேலும் அவர்களுடன் யாமி கவுதம், அபிஷேக் பச்சன், படத்தில் நடித்துள்ள இன்னொரு நடிகையான நிம்ரத் கவுர் ஆகியோரும் இணைந்து படம் பார்த்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.