'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையை சேர்ந்தவர். 2006ம் ஆண்டு மிஸ்ஸ்ரீலங்கா பட்டம் வென்றதும் மாடலிங் துறையில் முன்னணிக்கு வந்தார். அதன்பிறகு பாலிவுட் நடிகை ஆனார். மர்டர் 2, ரேஸ் 2, ஹவுஸ்புல் 3, கிக், ராய், சாஹோ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது விக்ராந்த் ராணா, கிர்குஸ், ராம்சேட் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இலங்கையில் நடந்து வரும் பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள், விலைவாசி உயர்வு, மக்கள் போராட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : ‛‛எனது நாட்டு மக்களை பார்க்கும்போது மனம் கஷ்டப்படுகிறது. இலங்கை குடிமகளாக இருப்பதால் இதையெல்லாம் பார்க்கும்போது மனம் வருத்தமாக இருக்கிறது. தற்போதைய சூழல்கள் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என் நாட்டுக்காக, மக்களுக்காக 2 நிமிடம் அமைதியாக பிரார்த்தனை செய்தால் கூட போதும். அதனால் நிறைய பலன் கிடைக்கும்'' என்கிறார்.