'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் மீது ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடத்தில் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டிக்கு மும்பை நீதிமன்றம் ஒரு சம்மன் அனுப்பி இருக்கிறது.
அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டியின் தந்தை, பர்கத் அம்ரா என்பவரிடத்தில் 21 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். அதையடுத்து ஷில்பா ஷெட்டியின் தந்தை இறந்துவிட்டார். அதையடுத்து தந்தை வாங்கிய கடனை ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருடன் கேட்ட போது, கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மும்பை நீதிமன்றத்தில் அதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிப்ரவரி 28ஆம் தேதி ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் மற்றும் தங்கையை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளார்.