ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள வெப் தொடர் ராக்கெட் பாய்ஸ். அபய் பன்னு இயக்கி உள்ள இந்த தொடரில் ஜிம் சர்ப், இஷ்வாக் சிங், ரெஜினா கெசாண்ட்ரா, சபா ஆஷாத், ரஜித் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் ராய் கபூர் தயாரித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த விண்வெளி ஆராய்ச்சியின்போது அன்றைய விஞ்ஞானிகள் சந்தித்த பிரச்சினைகளை கதை களமாக கொண்டு இது உருவாகி உள்ளது. இதில் இந்திய அணுசக்தி விஞ்ஞானி ஹோமி ஜோ பாபா கதாபாத்திரத்தில் ஜிம் சர்ப்பும், டாக்டர் விக்ரம் சாராபாய் கதாபாத்திரத்தில் இஷ்வக் சிங்கும், பிரபல நடன கலைஞர் மிருணாளியாக ரெஜினா கஸாண்ட்ராவும், அப்துல் கலாம் வேடத்தில் அர்ஜுன் ராதாகிருஷ்ணனும் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா குறித்து தவறாக சித்திரித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திருவிதாங்கூரில் இருந்து மோனோசைட் தாதுக்களை ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்ததாகவும் இதற்கு மன்னர் உடந்தையாக இருந்ததாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து மன்னர் சித்திரை திருநாளின் மருமகள் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் கூறியிருப்பதாவது: ராக்கெட் பாய்ஸ் வெப் தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாளை உண்மைக்கு மாறாக ஆதாரமில்லாமல் தவறாக சித்தரித்து உள்ளனர். எனவே இந்த தொடருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.




