ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
'பாகுபலி' படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய ஹீரோக்கள் பான்-இந்தியா ஸ்டார்களாக மாறி வருகிறார்கள். பிரபாஸுக்கு பாலிவுட்டிலும் தனி மார்க்கெட் உருவாகி விட்டது. சமீபத்தில் 'புஷ்பா' வெற்றி முலம் அல்லு அர்ஜுனும் தனது கணக்கைத் துவக்கியுள்ளார். அடுத்தடுத்து மேலும் சில தென்னிந்திய படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
அடிக்கடி சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் தற்போது தென்னிந்திய ஹீரோக்களைப் பற்றி ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “தென்னிந்திய ஸ்டார்களும், தென்னிந்திய படங்களும் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறது என்பதற்கு சில காரணங்கள்…1.அவர்கள் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியவர்கள், 2. அவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவுகளை நேசிக்கிறார்கள், மேற்கத்திய மயமாக இருக்கவில்லை, 3. அவர்கள் தொழில்முறையும் ஆர்வமும் இணையற்றது,” எனக் குறிப்பிட்டு, “பாலிவுட் அவர்களை கெடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது,” என பதிவிட்டுள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டிற்கு அடுத்தடுத்து சில நடிகர்கள் வந்து வெற்றி பெறுவதால் பாலிவுட் ஹீரோக்களை வெறுப்பேற்ற இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறாரோ கங்கனா ?.