வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி |
இந்தியாவில் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அடுத்த பெரிய திரைப்பட விழா கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவாகும். கோவாவில் சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் கோல்கட்டாவில் நாளை (ஜன 7) தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில தகவல் மற்றும் கலாச்சாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலத்தின் தற்போதைய கோவிட் நிலைமையை மதிப்பிடும்போது, சினிமா ஆர்வலர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் கோவிட் மேலும் அதிகமாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
மேலும் திரைப்பட விழாக் குழுவில் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குடிமக்களின் பாதுகாப்பை கவனமாக பரிசீலித்த மாநில அரசு, ஜனவரி 7 முதல் நடைபெறவிருந்த 27வது கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. விழாவின் அடுத்த தேதி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.