'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தென்னிந்திய சீனியர் குணச்சித்திர நடிகர்களை அழைத்து நடிக்க வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் வித்யாபாலனின் தந்தையாக தற்போது நடிகர் தலைவாசல் விஜய் ஹிந்திப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் ஜங்லீ, பெல்பாட்டம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் தலைவாசல் விஜய்.
“தும்ஹாரி சுலு, டர்ட்டி பிக்சர் ஆகிய படங்களில் வித்யாபாலனின் நடிப்பை பார்த்து வியந்த நான், இப்போது இந்தப்படத்தில் நேரில் அவரது மாறுபட்ட மற்றுமொரு நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். புரிந்துகொள்வதற்கு ரொம்பவே கடினமான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன் என கூறியுள்ளார் தலைவாசல் விஜய். தற்போது ஊட்டியில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தலைவாசல் விஜய் அடுத்ததாக மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.
பிரபல விளம்பர பட இயக்குனரான ஷிர்ஷா குகா தகுர்த்தா என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் தடைகளற்ற நவீன மனித உறவுகள் பற்றி அலசுகிறது. இந்தப்படத்தில் இலியானா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.