ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் |

'மிஸ் வேர்ல்டு 2000' ஆக பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பின்னர்தான் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
2018ம் ஆண்டு பிரபல அமெரிக்கப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பிரியங்காவை விட நிக் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பின்னர் பிரியங்கா அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தனது பெயரை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என மாற்றிக் கொண்டார். ஆனால், நேற்று திடீரென கணவர் பெயரான ஜோனஸ் என்பதை நீக்கிவிட்டு பிரியங்கா சோப்ரா என்று மட்டும் வைத்துக் கொண்டார்.
இதனால், சமூக வலைத்தளங்களில் இருவரும் பிரியப் போகிறார்களோ என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால், அவற்றுக்கெல்லாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் பிரியங்கா. கணவர் நிக் ஜோனஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ ஒன்றிற்கு கமெண்ட் செய்து மற்றவர்கள் மேற்கொண்டு சர்ச்சை எழுப்ப முடியாதபடி செய்துவிட்டார்.
சமீபத்தில்தான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாங்கிய புதிய வீட்டில் தீபாவளியை முதல் முறையாக ஒன்றாகக் கொண்டாடியது பற்றி இது மிகவும் ஸ்பெஷலானது என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார் பிரியங்கா.