விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

பாலிவுட் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தவர் மாதவி கோகேட். கோவிந்தா, ஜூஹி சாவ்லா நடித்த ஸ்வர்க் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர். பாலிவுட் தவிர மராத்தி படங்களிலும் நடித்து வந்தார். ஸ்டார் பிளஸில் ஒளிபரப்பாகி வரும் அனுபமா சீரியலில் கடைசியாக நடித்தார்.
58 வயதான மாதவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மாதவியின் மரணத்திற்கு இந்தி திரையுலக, சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.