அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் | மதுரை மண்ணின் மைந்தன்... ‛சொக்கத்தங்கம்' விஜயகாந்த் பிறந்ததினம் இன்று | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் கல்யாணி பிரியதர்ஷினின் 2 படங்கள் |
திகட்ட திகட்ட கிடைக்கும் வெற்றி, நல்ல ஒரு கலைஞனை கூட கொஞ்சம் சறுக்கிவிட்டு, வேடிக்கை பார்த்து விடுகிறது. 'அப்படியொரு தடுமாற்றத்தில் நீங்கள் மாட்டிக் கொண்டீர்களோ?' என்ற, உங்கள் ரசிகனின் அக்கறையே, இந்தக் கடிதம்!
நடிக்க வந்த புதிதில், எல்லோரும் வெறுக்க காரணமாய் இருந்த, ஒரு விஷயத்தை சாதகமாக்கி, பின், அதற்காகவே கொண்டாடவும் வைத்தது, உங்களின் நடிப்பு. எல்லோருக்கும் எளிதில் கைவராத அந்த வித்தையை செய்து காட்டியது, தன் பலவீனத்தை உணர்ந்த உங்களின் உழைப்பு. 'உடம்பும் இல்ல; நடிக்கவும் தெரியல... இவனெல்லாம் நடிச்சு என்னத்தை கழட்டப்போறான்' என பேசிய என் போன்றவர்களையும், 'நல்லா நடிக்கிறான்டா, நம்ம வீட்டு பையன் மாதிரியே இருக்கான்ல' என கொண்டாட வைத்தது, அந்த உழைப்பும், நடிப்பும்!
பிறரின் வெறுப்பு தந்த வலியையும், அதை வெற்றி கொண்ட அனுபவத்தையும் கொண்டு, சினிமாவில் உங்களுக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கியிருக்கின்றீர். இந்தியிலும் ரசிகர்களை வென்று, 'ஆப்போனட்டா ஆளே இல்லாத' அந்த ராஜபாட்டையில், இன்று ஒரு சறுக்கல் விழுந்திருக்கிறது.
நேற்று வரை, எங்கள் பக்கத்து வீட்டு பையனாக இருந்தீர்கள்; திடீரென இன்று, ஒரு 'நாயக' பிம்பத்திற்குள் மாட்டிக்கொண்டீர்கள். உங்களின் திரை வாழ்க்கையையே சொந்த வாழ்க்கையாக பார்த்துப் பழகிப்போன என் போன்ற ரசிகர்களுக்கு, தொடர்ந்து குடித்தும், புகைத்தும் நடித்து, அதிர்ச்சியளித்து விட்டீர்கள். யாருக்காக இப்படியொரு அவதாரம்?
சக நடிகனின் திறமையை அங்கீகரிக்கும் ஒரு கலைஞனுக்கு, தன் ரசிகர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது. அதை, இத்தனை ஆண்டு சினிமா அனுபவம், கண்டிப்பாய் உங்களுக்கு உணர்த்தியிருக்கும். இனி வரும் படங்களிலாவது, ரசிகனுக்காக அந்த கடமையைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்!
இப்படிக்கு,
உங்கள் ரசிகன்