30 வருடத்தில் இதுவே முதல் முறை - பாடகர் உன்னி கிருஷ்ணன் | ''கார் ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்'': அஜித் பேட்டி | சூர்யா தோல்வி முகத்தில் இல்லை! - தயாரிப்பாளர் எஸ்.தாணு | விஷால் சிங்கம் போல் மீண்டு வருவார்! - ஜெயம் ரவி நம்பிக்கை | ஆன்லைனில் லீக்கான ஷங்கரின் கேம் சேஞ்ஜர்! | ஜி.வி.பிரகாஷின் கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியானது! | பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனங்களின் மறுபக்கத்தை காட்டும் காஜல் அகர்வால் படம் | தாக்கப்பட்ட பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டு இழப்பீடு தர தயார் : நீதிமன்றத்தில் மோகன் பாபு மனு | பிளாஷ்பேக் : ஒரே பாடலில் வாழ்ந்த சிலோன் மனோகர் | பிளாஷ்பேக் : சினிமா திரையில் கபாலீசுவரரை தரிசித்த மக்கள் |
தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக நடித்து வரும் நடிகை அவர். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பிரபலமான அவருக்கு கைவசம் முன்னணி நடிகர்களின் படங்கள் உள்ளது. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் நடித்து வரும் அவர், இயக்குநர்களுக்கு புதிதாக கண்டிசன்கள் போடுகிறாராம். அதாவது, 'இனிமேல் நாயகர்களுடன் டூயட் எல்லாம் வைக்க வேண்டாம், காதல், ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் முன்போல் நடிக்க முடியாது' என கறாராகச் சொல்கிறாராம்.
ஏற்கனவே கதை கேட்டுவிட்டுத் தானே நடிக்க சம்மதித்தார். இப்போது திடீரென இப்படி சொல்கிறாரே என இயக்குநர்கள் புலம்பி வருகிறார்களாம். புதிதாக கதை சொல்ல வருபவர்களிடம் இதே கண்டிசன்களை மறக்காமல் சொல்லி விடுகிறாராம் நடிகை.
திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் பிரச்சினை வரும் என நடிகை நினைப்பது சரி தான். ஆனால் சம்பளத்தை மட்டும் பழைய மாதிரியே கோடிகளில் எதிர்பார்க்கிறாரே.. அதையும் குறைத்துக் கொள்ள வேண்டாமா என ஆதங்கப் படுகின்றனர் இயக்குநர்கள்.