தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! |

வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆள்பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்த தேர்தலில் கமல்ஹாசனை தவிர மக்களை ஈர்க்கும் நட்சத்திர தலைவர்கள் யாரும் இல்லை என்பதால் திரைப்பட நட்சத்திரங்களை பிரச்சார பீரங்கிகளாக்க கட்சிகள் தனி டீம் போட்டு தேடி வருகிறார்கள்.
அரசியல் கட்சிகளில் ஆர்வத்தை புரிந்து கொண்ட நடிகர், நடிகைகள் யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்கள் மேடையில் முழங்க தயாராகி வருகிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் பல நடிகர்கள், நடிகைகள் வருகிற தேர்தலில் பிரச்சார பீரங்கிகளாக வெடிக்கக் கிளம்புகிறார்கள். அவர்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்க எல்லா கட்சியிலும் தனி யூனிட்டை உருவாக்கி இருக்கிறார்கள்.




