விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
பிரியமான ஆனந்தமான நடிகையின் மீது அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களே சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களாம். அவர் நடித்த ஒரு சில படங்கள் வெற்றி பெற்றதாலும் கிளாமர் விஷயத்தில் அவர் கொஞ்சம் தாராளமாக நடந்து கொள்வதாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், பல சமயங்களில் தேவையற்ற செலவுகளை இழுத்து விடுகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். சமீபத்தில் வெளியான அயர்ன் ஹார்ஸ் படம் படு தோல்வியாக அமைந்ததில் நடிகையும் நிறையவே வருத்தத்தில் இருக்கிறாராம். ஆனால் அடுத்து வரும் இரண்டு கிங் படம் தனக்கு நல்ல வெற்றியைத் தரும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறாராம். இதனிடையே அந்தப் படத்தில் அவரால் படத்தின் பட்ஜெட் ஒரு கோடிக்கும் மேல் அதிகமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவில்லையென்றாலும் இரண்டாம் நிலை ஹீரோக்களிடன் படங்களில்தான் அவர் அதிகம் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட படங்களின் பட்ஜெட் பத்து கோடிக்கும் கீழாகத்தான் இருக்கும். இவரால் பட்ஜெட் அதிகமானால் பின்னர் வியாபாரத்தில் அதைச் சரிக்கட்டுவது கடினம் என்பதெல்லாம் இவருக்குத் தெரியாதா என்றும் கேட்கிறார்கள். இவர் நடிக்கும் படங்களில் நாயகர்களே மிகவும் சிம்பிளாக நடந்து கொள்ளும் போது இவருடைய பந்தாவிற்கு குறைச்சலில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் ரசிகர்களுக்கும் இவர் மீது கொஞ்சம் அபிமானம் இருக்கிறது. அதையும் சேர்த்துக் கெடுத்துக் கொள்வார் போலிருக்கிறதே என்றும் பேசிக் கொள்கிறார்கள்.