56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! |

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பமானதிலிருந்து எந்தவிதமான போஸ்டர்களையும் வெளியிடாமல் இருந்தது படக்குழு.
அப்படத்திற்கு அடுத்து அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் இரண்டு லுக்குகள் வெளியான பின்பு கூட எதையும் விடாமல் இருந்தார்கள். ரசிகர்கள் பலர் கேட்டதற்குப் பிறகு ஒரு வழியாக ஜுன் 30ம் தேதி திடீரென 'விடாமுயற்சி' படத்தின் முதல் லுக்கை வெளியிட்டார்கள். ஒரு நெடுஞ்சாலையில் கையில் ஒரு பேக்குடன் அஜித் நடந்து வருவது போன்ற முதல் லுக் வெளியானது. அதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தது. அதை வைத்து பல மீம்ஸ்களும் வெளிவந்தன. இப்படியா முதல் போஸ்டரை வெளியிடுவது என்று அஜித் ரசிகர்களே நொந்து போனார்கள்.
இந்நிலையில் நேற்று திடீரென இரண்டாவது லுக்கை வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். அது மட்டுமல்ல இரண்டு விதமான லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்கள். ஒரு போஸ்டரில் அஜித் ஜீப் ஓட்டுவது போலவும், மற்றொரு போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் நிற்பது போலவும் வெளியிட்டார்கள். முதல் லுக்கின் விமர்சனங்களை சமாளிக்கும் விதமாக இந்த இரண்டு இரண்டாவது போஸ்டர்களும் படம் ஆக்ஷன் படம்தான் என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தன.