Advertisement

சிறப்புச்செய்திகள்

மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் | தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

திருவிளையாடல் : மனிதன் எடுத்த தெய்வ அவதாரம்

26 மே, 2015 - 17:18 IST
எழுத்தின் அளவு:

நடிகர் திலகம் சிவாஜி எனும் மாபெரும் கலைஞனின் புகழ் கிரீடத்தின் உச்சியில் மாணிக்க கல்லாக இன்றும் மின்னிக் கொண்டிருப்பது திருவிளையாடல். 1965ம் ஆண்டு ஜூலை 31ந் தேதி இந்த புராண காவியம் வெளிவந்தது. ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏ.பி.நாகராஜன் அன்றைக்கே பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்த படம். இயக்குனரும் அவரே. இன்றைக்கு அந்தப் படத்தை அதே தரத்துடன் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது 100 கோடி ரூபாய் வேண்டும். ஒரு இயக்குனர் தன்னை நம்பி அத்தனை பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்திருப்பதே மிகப்பெரிய ஆச்சர்யம்.


மனிதர்கள் தெய்வங்களாக...


திருவிளையாடலுக்கு முன்பும் புராண படங்கள் நிறைய வந்திருக்கிறது. திருவிளையாடலில் என்ன புதுமை என்றால் கடவுளை மனித உருவில் நடமாடவிட்ட படம். கதையின் நாயகனான பரமசிவன் மனித உருவில் வந்து பல திருவிளையாடல்களை நடத்திய கதை. பரமசிவன் என்ற கடவுளை தமிழ் மக்கள் புராணங்களிலும், பக்தி பாடல்களிலும் படித்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று கற்பனை செய்து வைத்திருந்தார்கள். அந்த கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தார் சிவாஜி. பரமசிவன் எப்படி நடப்பார், சிரிப்பார், கோபப்படுவார், என்பதெல்லாம் திருவிளையாடலுக்கு பிறகே மக்களுக்கு முழுமையாக தெரியவந்தது. பல திரைப்படங்களில் பல நடிகர்கள் சிவன் வேடமிட்டாலும் இன்று வரை சிவாஜியின் நிழலுக்கு நிகராககூட எவரும் நடித்து விடவில்லை.


இதேபோலத்தான் உமையாளகவே, பார்வதி தேவியாகவே சாவித்திரி வாழ்ந்திருந்தார். அன்றைக்கு இருந்த, இன்றைக்கும் இருக்கிற கணவன் மனைவிகளின் ஈகோ சண்டையை பரமசிவன், பார்வதி சண்டையாக உருவகப்படுத்தி கொடுத்து இறைவனையும் மனிதனுக்கு பக்கத்தில் வைத்தால்தான் படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. படத்தில் ஏராளமான கேரக்டர்கள் இருந்தாலும் அந்த கேரக்டர்கள் அவற்றுக்குண்டான நியாங்களோடு இருந்தது. ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு மனிதனின் குணத்தை சித்தரிப்பதாக இருந்தது.


சமூக பிரச்சினைகள் பேசிய படம்


புராண படங்களில் பாதி வசனங்கள் மக்களுக்கு புரியாமல் இருந்த காலத்தில் தூய தமிழில் வசனத்தை எழுதி மக்களுக்கு கடவுளின் வாழ்க்கையை புரிய வைத்த படம். பார்வதிக்கும் பரமசிவனுக்குமான கருத்து மோதலில் "கடைசி குடிமகனில் இருந்து உலகை காக்கும் ஈசன் குடும்பம் வரை பெண்ணாக பிறப்பது பெரும் தவறென்று புரிந்து விட்டது" என்று சாவித்ரி பேசிய வசனம் புராணப்படத்திலும் பெண்களின் நிலை பேசப்பட்டது. நக்கீரனுக்கும், சிவனுக்குமான விவாதத்தில் "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற பொது நீதி சொல்லப்பட்டது. செருக்குண்டு திரிந்து, பாட்டுக்கு நாட்டையே கேட்ட ஹேமநாத பாகவதரை (டி.எஸ்.பாலையா) விறகு வெட்டியின் பாட்டுக்கு அடிமையாக்கி அனுப்பி வைத்த திரைக்கதை அபாரம் இதுவரை மற்ற புராண படங்களில் சாத்தியப்படாதது.


திரைக்கதை சாதனை


ஞானப்பழம் கிடைக்காமல் கோபித்துக் கொண்டு சென்ற முருகனை சமாதானப்படுத்த சென்ற அவ்வை, அப்பன் சிவனின் திருவிளையாடல்களை சொல்லி முருகனின் கோபத்தை தணிக்கும் விதமான திரைக்கதை திரைப்படக் கல்லூரியில் பாடமாக வைக்கத் தக்க தகுதியுடையது. கண்களுக்கு குளிர்ச்சியான, வண்ணமயமான ஒளிப்பதிவை இப்போது பார்த்தாலும் ஆச்சர்யப்பட வைக்கும். கே.வி.பிரசாத்தின் கேமரா கைவண்ணம் காலத்தை கடந்தும் நிற்கிறது. கே.வி.மகாதேவன் ஒரு இசை தேவனாகவே இந்தப் படத்தில் தனது ராஜாங்கத்தை நிகழ்த்தியிருப்பார்.


இசை ராஜாங்கம்


பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா... (கே.வி.சுந்தராம்பாள்), இன்னொரு நாள் போதுமா... (எம்.பாலமுரளி கிருஷ்ணா), இசை தமிழ் நீ செய்த அருஞ் சாதனை (டி.ஆர்.மகாலிங்கம்), பார்த்தால் பசு மரம் படுத்துவிட்டா நெடுமரம்... (டி.எம்.சவுந்தர்ராஜன்), பாட்டும் நானே பாவமும் நானே.. (டி.எம்.சவுந்தர்ராஜன்), பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்... (எஸ்.ஜானகி, பி.பி.ஸ்ரீனிவாஸ்), ஒன்றானவன் உருவில் இரண்டானவன்..-. (கே.பி.சுந்தராம்பாள்), இல்லாததொன்றில்லை... (டி.ஆர்.மகாலிங்கம்) ஆகிய பாடல்கள் காற்று உள்ள வரை காலமெல்லாம் நிறைந்திருக்கும்.


தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த இந்த மகா காவியத்தை சின்னத்திரையில் பார்க்க நேர்தால் உங்கள் ரிமோட்டை விலக்கி வைத்து விட்டு அனுபவித்து பாருங்கள் இனம் புரியாத ஆனந்தம் உங்களை ஆட்கொள்ளும். காரணம் தெய்வம் மனித அவதாரம் எடுக்கும் இந்த யுகத்தில் சிவாஜி என்னும் மனிதன் தெய்வ அவதாரம் எடுத்த அதிசயம் திருவிளையாடல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2019ல் நட்சத்திரங்களின் புத்தாண்டு கொண்டாட்டம் 2019ல் நட்சத்திரங்களின் புத்தாண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in