இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
2010 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புதுமுக நடிகர்களில் கவனம் பெற்றவர்கள் இன்று முக்கிய நட்சத்திரங்களாக உள்ளனர். 2020 எனும் அடுத்த தசாப்தம் துவங்கி பலர் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்த இளைஞர்கள் பட்டாளத்தில் தனக்கென தனித்துவ கதாபாத்திர தேர்வுகளுடன் வசீகரிக்கிறார் நடிகர் மாசாந்த் நடராஜன். முறைப்படி நடிப்பை கற்று 'கயமை கடக்க', 'நீல நிற சூரியன்' போன்ற திரைப்பட விழாக்களில் கவனம் பெற்ற படங்களில் நடித்த இவர் கூறியதாவது....
சொந்த ஊர் மேட்டுப்பாளையம். சிறுவயதில் இருந்து திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். பள்ளி, கல்லுாரி நாடகங்களில் நடித்தேன்.
இன்ஜினியரிங் முடித்த கையோடு எனக்கு சினிமா கற்றுக் கொள்ள ஆசை என பெற்றோரிடம் கூறினேன். பிடித்ததை செய் என்றனர். சென்னை வந்து கூத்துப்பட்டறை சென்றேன். நடிப்பை கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தது. ஆனால் அங்கு சென்ற பின் தான் நடிப்பு என்பது கற்றுக் கொள்ள முடியாதது. பயிற்சிகள், முயற்சிகள் செய்தாலும், நடிப்பு என்பது உணர்வதில் தான் உள்ளது என புரிந்தது. கூத்துப்பட்டறை நடிப்பைக் கற்றுக் கொள்வதாக நினைக்காமல் ஆளுமையை வளர்க்கும் இடமாக இருந்தது.
அங்கு கற்ற பிறகு நானும் நிறைய தனிப்பட்ட முறையில் கற்றேன். 'ஸ்தனிஸ்லாவ்ஸ்கி மெத்தட்' நடிப்பு என பலவற்றையும் கற்றேன். கூத்துப்பட்டறை முடித்த பிறகு மீண்டும் கோயம்புத்துார் வந்து விட்டேன். என் கல்லுாரி சீனியர் சுந்தர் ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உதவியாளர். ஒரு கதை உள்ளது என அழைத்தார். நான் நடித்தேன். படம் வெளியாகவில்லை.
மணிரத்னத்தின் உதவி இயக்குனர் கிரண் இயக்கத்தில் 'கயமை கடக்க' திரைப்படத்தில் நடித்தேன். நிறைய சர்வதேச விழாக்களில் பாராட்டை அள்ளியது. படத்தில் 5 பேர் தான் பணியாற்றினோம். பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசிக் கொள்ளும் இரு முகநுால் நண்பர்கள் நேரில் சந்திக்கும் போது என்ன நடக்கிறது, பேசுவதை பின்பற்றுகின்றனரா என்பது கதை. மெதுவாக செல்லும் த்ரில்லர் திரைக்கதை என பலர் பாராட்டினர்.
அடுத்ததாக சம்யுக்தா விஜயன் இயக்கத்தில் 'நீல நிற சூரியன்' படத்தில் நடித்தது வரப்பிரசாதம். கார்த்திக் எனும் பள்ளி சிறுவனாக ஆணும், பெண்ணும் இல்லாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தேன். பள்ளி வயதில் ஏற்படும் உணர்வுகளின் போது ஏற்பட்ட தடுமாற்றம், உளவியல் சிக்கல்குறித்து நுணுக்கமாக நடிக்க முடிந்தது.
தொடர்ந்து மூன்று வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து விட்டேன். இனி கமர்ஷியல் ரொமென்டிக் காமெடி போன்ற படங்களில் நடிக்க வேண்டும். நாம் நடிக்கும் கதாபாத்திரங்கள், புது பிறப்பு எடுத்தது போன்ற அனுபவத்தை தரும். எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை. எல்லோருடைய 'நடிப்பு முறைகளையும்' தெரிந்து எனக்கென தனி பாணி உருவாக்க விரும்புகிறேன் என்றார்.