தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
கலை குடும்ப பின்னணி, நாடகம், நடிப்பு, நாட்டியம், தயாரிப்பு, சேவை, அரசியல் என கலவையான செயற்பாட்டாளர் ஒய்.ஜி.மதுவந்தி. கட்சி பணி, யுடியூப் வீடியோ, டி.வி ஷோ என எதுவானாலும் தடாலடியாக பேசும் இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். அடிப்படையில் மேடை நாடக கலைஞரான மதுவந்தி, அப்பா ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கத்தில் 'லைட்ஸ் ஆன்' எனும் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம் பேசியதாவது...
குடும்பமே கலைஞர்கள்
பிரபல மேடை நாடக எழுத்தாளர் தாத்தா ஒய்.ஜி.பார்த்தசாரதி, பாட்டி ராஜலட்சுமி, அப்பா ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குனர் பாலாஜி, நடிகை வைஜெயந்தி மாலா, நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் லதா ரஜினிகாந்த் என குடும்ப உறுப்பினர் அனைவருமே கலைஞர்கள். அந்தவகையில் அவர்களை பின் தொடர்ந்து வளர்ந்த எனக்கு கல்வி, நாடகம், மேடை பேச்சு, நடிப்பு, ஆளுமை, தலைமைப்பண்பு என எல்லாம் சிறு வயதிலே எளிதாகிவிட்டது. நானாக விரும்பி கற்றுக் கொண்டது பரதம். அதன்வழி வாழ்வியல் வழிமுறை, சனாதன தர்மம், அரசியல் என அனைத்தும் கற்றுக் கொண்டேன்.
'தர்மதுரை' படத்தின் மூலம் தாமதமாகத்தான் சினிமாவுக்குள் அறிமுகமானேன். என் திறமை அறிந்து அணுகுபவர்களின் படத்தில் நடிக்கிறேன். பி.டி.சார்., சிவலிங்கா, தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது இவன் ராபின்ஹூட், அப்பா ஒய்.ஜி.,மகேந்திரன் இயக்கத்தில் சாருகேசி, மகா பெரியவர் பற்றிய யுடியூப் படமொன்றிலும் நடித்திருக்கிறேன்.
சங்கி என்றால் நண்பன்
'சங்கி' என்பது கேலிக்கான வார்த்தை அல்ல. துளசி ராமாயணத்தில் 'சங்கி' என்றால் எல்லோரையும் அரவணைத்து செல்லும் நண்பன் என்று அர்த்தம். ஜாதி, மத, பேதம் அற்று அனைவரையும் அரவணைத்து செல்வதே சனாதன தர்மம். அந்த கோட்பாட்டை கடைப்பிடிக்கும் கட்சி பா.ஜ,. அதன் தீவிர காரியகர்த்தா என்பது எனக்கு பெருமைதான்.
நான் பிறப்பின் தர்மங்கள் பேசினால் ஆதிக்க ஜாதிவெறி என எனக்கு முத்திரை குத்துகின்றனர். என்னை பொறுத்தவரை பிற தர்மங்களை பற்றி அவதுாறு சொல்வதும் தவறான தகவல் தருவதும் தான் ஜாதிவெறி. அதை நான் ஒருபோதும் செய்தது கிடையாது. என்னுடைய யுடியூப் சேனல்களில் நான் வெளியிடும் வீடியோக்கள் எல்லாமே சிந்தாந்தத்தின் அடிப்படையில் கேள்விகளாக முன்வைப்பவை. அந்த தர்க்கத்தில் அணுகாமல் அதைத்தாண்டிய பார்வையில் என்மீது ஏவப்படும் விமர்சனங்களை, தனிமனித கேலி, கிண்டல்களை நான் பொருட்படுத்துவது இல்லை.
நானும் மக்கள் பிரதிநிதி
எதிர்ப்பாளர்கள்போல் எனக்கான ஆதரவாளர்களையும் சமூத்தில் நான் சம்பாதித்திருக்கிறேன். அவர்கள் தரும் வாழ்த்தும், ஊக்கமும் தான் எனக்கான 'அவார்டு'. கட்சியின் காரியவாதியாக மக்களை சந்தித்துப்பேசி, மக்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பதால் என்னை நான் எப்போதும் மக்கள் பிரதிநிதியாகத்தான் பார்க்கிறேன்.
நாடகம், அரசியல், மேடைநிகழ்ச்சி, தயாரிப்பு, யுடியூப் வீடியோ என பொழுது முழுவதும் வேலை இருப்பதால் பரதம் ஆடுவதை குறைத்துக் கொண்டேன். எதையும் ஒளிவுமறைவின்றி பேசுபவள் என்பதால் கிசுகிசுக்களில் நான் சிக்குவதில்லை. சினிமாவில் முன்புபோல் மேடை நாடக கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.
அப்பா எப்போதும் நாடகத்துக்கே முதல் முக்கியத்துவம் தருவார். மேடை நாடகத்தில் அவரின் அர்ப்பணிப்பு, நேர மேலாண்மை, இயக்கம் இதெல்லாம் அவரிடம் கற்றுக்கொண்டது. அவரிடமிருந்து பெற்ற உந்துதலில்தான் 3வது தலைமுறையாக மேடை நாடகத்தை 12 நாடுகளில் 800க்கும் மேற்பட்ட ஷோக்களை நான் அரங்கேற்றியிருக்கிறேன் என்றார்.