டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பாலிவுட்டில் நடிக்க எல்லா நடிகைகளுக்குமே ஆசை இருக்கும். ஆனால் பாலிவுட்டில் ஓரிரு சினிமாக்களில் நடித்த கையுடன் கோலிவுட்டிற்கு வர ஆர்வம் காட்டி வருகிறார் சினேகா பால்.
கோல்கட்டாவில் பிறந்தாலும் சினிமா மீதான ஆசையில் மும்பையில் செட்டிலாகியிருக்கும் சினேகாபால் ஆக்டிங், மாடலிங்குடன் சோஷியல் மீடியாவிலும் 'ஆக்டிவ்' ஆக இருக்கிறார்.
சார்ம் சுக் வெப் தொடரில் ரேணுபாபி கேரக்டரில் நடித்து ஓ.டி.டி. தளத்தில் பிரபலமான சினேகாபால், டிஸ்னி ஹாட்ஸ்டாரின் தி சிட்டி அண்ட் எ கேர்ள் ேஷா மூலம் வடமாநில ரசிகர்களிடம் பிரபலமானார். அல்தாப் ராஜா இசை வீடியோ 'பூல் கே பத்லே பத்தர்'ல் நடித்து இளைஞர்களை கிறங்கடித்து கோலிவுட் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து....
சிறு வயதிலிருந்தே மாடலிங் மீது ஆர்வம். இதற்காக படித்து முடித்த கையுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தோம். பிட்னஸ் சென்டர் விளம்பர படம் ஒன்றில் முதலில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. அந்த விளம்பரம் பல வாய்ப்புகளை பெற்று தந்தது. பெங்காலி படம் ஒன்றில் நாயகியாக நடித்தேன். பிறகு சாரம்சுக், லால்லிஹாப், சால் ஹவுஸ் 3 உள்ளிட்ட பல ஓ.டி.டி, வெப் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.
பள்ளியில் படிக்கும் போதே தமிழ் சினிமா மீது ஈர்ப்பு உண்டு. பல தமிழ் சினிமாக்களை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன். ஆங்கில மொழி பெயர்ப்பும் இருப்பதால் வித்தியாசம் தெரிவதில்லை.
தமிழ் சினிமாக்கள் உண்மை சம்பவம் போல அழகான கதைகளை கொண்டவையாக இருப்பதால் 'இன்டரஸ்டிங்' ஆக இருக்கும். என் 'எனி டைம் பேவரைட்' ரஜினி தான். அல்லு அர்ஜூன், மகேஷ்பாபு நடிப்பு பிடிக்கும்.
தமிழ் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நல்ல கதையம்சம் ஆக் ஷன் படம் என்றால் உடனடியாக ஓ.கே., சொல்லி விடுவேன்.
யோகா, நடனத்துடன் நாள் தவறாமல் ஜிம் சென்று விடுவேன். இதுதான் என் 'பிட்னஸ்' ரகசியம். ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பேன் பாடல்கள் கேட்பேன். பயணங்களில் ஐபேட் அல்லது லேப்டாப்பில் ஏதாவது ஒரு வெப் சீரியல் பார்த்து கொண்டபடி தான் பயணிப்பேன்.
எல்லா வகையான தென்னிந்திய உணவுகளும் பிடிக்கும். ஆனால் தென்னிந்தியாவிற்கு எங்கு சென்றாலும் என் 'பேவரைட்' பில்டர்காபியை ருசித்து விடுவேன் என்றார்.