'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
விண்ணில் உதித்த நிலவு மண்ணில் மலர்ந்ததோ... தாடகையில் பூத்த தாமரை தரையில் தவழ்ந்து வருகிறதோ... என கவிஞர்கள் பாடும் அழகும் திறமையும் அமையப்பெற்ற இவர், ஐ.டி., நிறுவன வேலையை உதறி விட்டு நீச்சலிலும், நடிப்பிலும் சாதித்து வருகிறார்.
டான்ஸர், கோச்சர், டிரெய்னர், ஆக்டர், ஆங்கர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வரும் இவர் வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வருவேன் என்கிறார். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் நடிகை ஜனனி பிரபு.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இவருடன் பேசியதிலிருந்து...
நெய்வேலி சொந்த ஊரு. அப்பா கோவர்த்தன் மத்திய அரசு ஊழியர். அம்மா சுசீலா குடும்பத்தலைவி. இங்கேயே பள்ளிப்படிப்பு முடித்தேன். ௨ம் வகுப்பு படித்த போது என்னையும், அண்ணனையும் பயிற்சியாளர் மூலம் நீச்சல் பயிற்சி பெற வைத்தார் அப்பா. இதனால் பள்ளி காலங்களிலேயே தேசிய நீச்சல் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வெல்ல முடிந்தது.
இன்ஜினியரிங் முடித்த கையுடன் சென்னையில் ஐ.டி., நிறுவன வேலை கிடைத்தது. சிறு வயதில் ஆங்கரிங், மாடலிங் ஆர்வம் இருந்தது. இதனால் ஐ.டி., நிறுவன பணியுடன் முன்னணி டிவி ஒன்றிலும் பகுதி நேரமாக ஆங்கரிங் செய்து வந்தேன். அதன் மூலம் மாடலிங் வாய்ப்பு கிட்டியது. 2018ல் மிஸ் சென்னை போட்டியில் பட்டம் பெற்றேன். அந்த பட்டம் தான் நினைத்தாலே இனிக்கும் சீரியல் வாய்ப்பை பெற்று தந்தது. அதில் நளினி கேரக்டர் சின்னத்திரையில் எனக்கென்று ஒரு இடத்தை வாங்கி கொடுத்தது. தற்போது பொன்னி சீரியலில் பவானி பாத்திரம் மக்களிடம் என்னை கொண்டு போய் சேர்த்திருக்கிறது. வெளியிடங்களில் மக்கள் பவானி என அழைப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
சீரியலுக்காக மாதத்தில் பாதி நாட்களை செலவிட வேண்டியிருக்கிறது. மீதமுள்ள நாட்களில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதோடு சிறுவர்கள், பெண்களுக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறேன். கணவர் பிரபு தனசேகர் நடத்தும் நிறுவனம் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு ஜூம்பா, டான்ஸ் பயிற்சியும் அளித்து வருகிறேன்.
2009ல் டான்ஸ் பயிற்சி பெற பிரபு தனசேகர் நிறுவனத்தில் சேர்ந்தேன். டான்ஸ் மீதிருந்த என் ஆர்வத்தை புரிந்து பயிற்சியளித்தார். அறிமுகம் நட்பாகி காதலில் முடிந்தது. 2011ல் திருமணம் செய்து கொண்டோம். இப்போது இரு குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர்.
சிங்கப்பூரில் நடக்கவுள்ள சர்வதேச நீச்சல் போட்டியில் மெடல் வெல்ல தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறேன். வெள்ளித்திரையை பற்றி யோசிக்க நேரமில்லை. அங்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரவுண்ட் வருவேன். விளையாட்டு வீராங்கனையாக, பயிற்சியாளர் கேரக்டர்களில் நடிக்க ஆசை.
நாம் என்ன ஆக வேண்டும் என்பதற்காக எடுத்து கொண்ட காரியங்களில் எந்த சவால் வந்தாலும் மனம் சோர்ந்து விடக்கூடாது. விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்தால் யாரும் சாதிக்கலாம். இதை இன்றைய இளையதலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றவாறு நம்மிடமிருந்து விடைபெற்றார்.